HEADLINES:
September 18 2018
ஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்
24 July 2018

புதுடில்லி : ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து டில்லியில் வர்த்தகர்கள் மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி., வரி 88 பொருட்களுக்கு சமீபத்தில் குறைக்கப்பட்டது. ஏழை மக்கள் உருவாக்கும் கைவினை பொருட்கள் உட்பட பலவற்றிற்கும் ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

நாட்டில் 6.5 கோடி வியாபாரிகளில், 1.25 கோடி பேர் மட்டுமே ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்துள்ளனர். 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் 6.10 கோடி பேர் மட்டுமே வரி வரம்புக்குள் வந்துள்ளனர். 

 

5 இடத்துக்குள்...

 

 

மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளில், இந்தியா 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இந்தியா, முதல் 5 இடத்துக்குள் வரும். உள்நாட்டு உற்பத்தியை இதே வேகத்தில் அதிகரித்து செல்லும் போது, 2030ம் ஆண்டுக்குள் உலகின் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும். இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Related Stories