HEADLINES:
December 10 2018
"அமோக வெற்றியை தாருங்கள்"- சிறையில் இருந்து நவாஸ் வேண்டுகோள்
24 July 2018

கராச்சி: நடக்கவிருக்கும் பார்லி., தேர்தலில் எனக்கு மக்கள் ஓட்டளித்து அபார வெற்றியை தாருங்கள் என ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் மாஜி பிரதமர் நவாஸ் ஷெ ரீப் கேட்டு கொண்டுள்ளார். 
பாகிஸ்தானில் நாளை 25 ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.



இதற்கிடையில் ராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெ ரீப் உரையாற்றும் வீடியோ ஒன்றை அவரது மகளான மரியம்நவாஸ்சும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில்; 25 ம் தேதி முடிவு கட்டும் நாளாக இருக்கட்டும். மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இது வரை இல்லாத அளவுக்கு பெருவாரியான வெற்றியை மக்களாகிய நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் நீதி தோற்று விட்டது. நீதியை காப்பாற்ற எனது சிங்கம் சின்னத்திற்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 





நீதிபதி அதிருப்தி

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐகோர்ட் நீதிபதி சுக்கூர் சித்திக் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்; பாக்., ஐ.எஸ்.ஐ., நீதி துறையில் தலையிடுகிறது. பத்திரிகை சுதந்திரம் இல்லை. நவாஸ் ஷெ ரீப்பை தேர்தல் முடியும் வரை வெளியில் விடக்கூடாது என நிர்பந்தம் வருகிறது என்றும் கூறியுள்ளார்.

 

 

Related Stories