HEADLINES:
December 10 2018
சென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி
24 July 2018

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணித்த 4 பேர் அடிபட்டு இறந்தனர். மாம்பலம் கோடம்பாக்கம் இடையே மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.


இதில், ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பலர் சென்றனர். இந்நேரத்தில் பரங்கிமலையில் தடுப்புச்சுவரில் அடிபட்டு சிலர் விழுந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமுற்று குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் கல்லூரி மாணவர் பிரவீன்குமார், பள்ளி மாணவர் பரத், சிவக்குமார், சங்கர் மற்றும் பாரதி ஆகியோரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் சாரங்கன், ரயில்வே ஐஜி வீரேந்திர குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இது போல் நேற்று மாலை நடந்த மற்றொரு விபத்தில் 2 பேர் பலியாயினர்.

படியில் தொங்கியபடி விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட பயணிகள் .

 


படிக்கட்டு பயணம் வேண்டாம்-ஏடிஜிபி

விபத்து நடந்த இடத்தை ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், விபத்து எப்படி நடந்தது என விசாரணை நடத்திவருகிறோம். தொடர்ந்து விபத்து நடந்ததால், தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என கோரியுள்ளோம். பயணிகள், படிக்கட்டில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். இது ஆபத்தானது. ரயில் கிடைக்காவிட்டால், வேறு ரயில், பஸ்சில் செல்லலாம். அதிக பயணிகள் ரயிலில் ஏறியுள்ளனர். பயணிப்பவர்கள் உள்ளே இருந்திருந்தால் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கும் . படிக்கட்டில் பயணித்ததே உயிரிழப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எக்காரணத்தை கொண்டும் படிக்கட்டில் பயணிக்கக்கூடாது என்றார்.

 

 

Related Stories