HEADLINES:
August 24 2019
கர்நாடகாவில் கடுப்பேற்றும் 'கடித அரசியல்'
18 July 2018

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு, கடந்த 45 நாட்களில் ஒன்பது கடிதங்களை எழுதி, கடுப்பேற்றி இருக்கிறார் முன்னாள் காங்., முதல்வர் சித்தராமையா.

கர்நாடகாவில், 2004ம் ஆண்டில் காங்., - மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி இருந்தது. அப்போது காங்., மூத்த தலைவர் தரம்சிங் முதல்வர். அப்போது ம.ஜ.த., தலைவர் தேவகவுடா, தினம் ஒரு கடிதம் எழுதி தரம்சிங்கை கடுப்பேற்றினார். கூட்டணி ஆட்சி தங்கள் தயவால் தான் செயல்படுகிறது என்ற தோற்றத்தை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் தேவகவுடா. 

அதே போல், தற்போது சித்தராமையா செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுததற்கு, இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

 

 

Related Stories