HEADLINES:
October 16 2018
ஹிந்து பாகிஸ்தான் கருத்தில் மாற்றமில்லை: சசி தரூர்
18 July 2018

திருவனந்தபுரம்: ஹிந்து பாகிஸ்தான் கருத்திலிருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப்போவது இல்லை என காங்., - எம்.பி., சசி தரூர் தெரிவித்து உள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், சசி தரூர். காங்., - எம்.பி.,யான இவர், 'அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால், இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என, கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது கருத்துக்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என சசி தரூர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவு: திருவனந்தபுரத்திலுள்ள எனது அலுவலகத்தை பா.ஜ.,வினர் தாக்கியுள்ளனர்; எனக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அவர்களது இச்செயல்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஹிந்து பாகிஸ்தான் கருத்திலிருந்து நான் பின்வாங்கப் போவது இல்லை. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

 

Related Stories