HEADLINES:
January 28 2020
காவிரி கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.பி.,க்களுக்கு ஐபோன்
18 July 2018

பெங்களூரு : காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.பி.,க்களுக்கு விலை உயர்ந்த ஐபோன் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சரத்துக்களில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கூறி வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக இன்று நடக்கும் கர்நாடக எம்.பி.,க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.பி.,க்களுக்கு அழைப்பிதழுடன் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஐபோன்னும், பைல்களை வைக்கும் விலை உயர்ந்த பேக் ஒன்றும் வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி இதற்கான உத்தரவை தான் பிறப்பிக்கவில்லை என்றார். இந்நிலையில் ஐபோனை தான் வழங்கியதாக அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

 

 

Related Stories