HEADLINES:
August 20 2018
மாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது
17 July 2018

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பள்ளி மாணவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்து, அவர்களை மூளைச் சலவை செய்த, ஆசிரியர்கள், 13 பேரை, போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வரும், பயங்கரவாதிகளை ஒடுக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும், 13 - 14 வயதுடைய மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களுடன், அருகில் உள்ள வனப் பகுதிக்கு சென்றனர். அவர்களுக்கு, பயங்கரவாதிகள் போல் செயல்படவும், பிறர் மீது தாக்குதல் நடத்துவது குறித்தும், அவர்களது ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர்; அவர்களை மூளைச் சலவை செய்தனர்.

இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்த, 13 ஆசிரியர்களையும் கைது செய்தனர். எனினும், இந்த சம்பவம் குறித்து, தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். 'ஆசிரியர்கள் தவறு செய்தது நிரூபணமானால், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை பாயும்' என, மாவட்ட கல்வி அதிகாரி எச்சரித்து உள்ளார்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்டோரில், 11 பேரை எச்சரித்து, அவர்களை போலீசார் விடுவித்துள்ளதாகவும், மீதமுள்ள இருவரிடம் விசாரணை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

Related Stories