HEADLINES:
December 07 2019
ஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி....
16 July 2018

பெங்களூரு : நாளை தான் (ஜூலை 17) ஆடி மாதம் பிறக்கிறது. இருப்பினும் அதற்கு முன்பே பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது காவிரி. 
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,500 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 80,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை:


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருகிறது. இன்று (ஜூலை 16) காலை நேர நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 45,316 கனஅடியில் இருந்து 60,120 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 83.20 அடியில் இருந்து 87.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 50.30 டிஎம்சி.,யாகவும், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாகவும் இருந்து வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரித்து வருவதால் இன்றோ அல்லது நாளையோ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது.

 

 

Related Stories