HEADLINES:
June 26 2019
கனமழை: வால்பாறை- பந்தலூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகம் உத்தரவு
11 July 2018

கோவை: கோவை, நீலகிரி மாட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை, பந்தலூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டார். இந்நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் இன்று (ஜூலை 11-ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 

 

நீலகிரி:


நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுாகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்துமாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள உத்தரவில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்துபெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர்,பந்தலூர், தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 11-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

திருப்பூரில் மழை

திருப்பூரில் பெரியார் காலனி, காந்திநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

 

இடுக்கிமாவட்டத்தில் மழை;

 


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளித்துமாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

 

Related Stories