HEADLINES:
November 21 2019
பிரெக்சிட் விவகாரத்தில் திருப்பம்: இரு பிரிட்டன் அமைச்சர்கள் விலகல்
10 July 2018

லண்டன்: பிரிட்டனில் பிரெக்சிட் விவகாரத்தில் பிரதமருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு அமைச்சர்கள் நேற்று பதவி விலகினர்.

ஐரோப்பாவைச் சேர்ந்த, 28 நாடுகளின் கூட்டமைப்பு, ஐரோப்பிய யூனியன் எனப்படுகிறது. இதன் முடிவுக்கு ஏற்பவே, உறுப்பு நாடுகள் செயல்படும். இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்கும் ஓட்டெடுப்பிலும், வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, மேற்கொண்டார். அதன் முதல்கட்டமாக, இதற்காக பார்லிமென்ட்டின் ஒப்புதல் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஆண்டு அந்நாட்டு பார்லிமென்ட்டில் 326 எம்.பி.,க்கள் ஆதரவுடன் நிறைவேறியது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வரும் மார்ச் 29, 2019 உடன் வெளியேறவுள்ளது. பிரெக்சிட்டுக்கு பிறகு பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வாறு வர்த்தகம் செய்து கொள்வது என்பதை இரு தரப்பும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை. அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே துவங்கினார்.

இந்நிலையில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரீஸ் ஜான்சன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்சிஸ்ட் விவகாரத்தில் பிரதமர் தெரசா மே உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போரீஸ் ஜான்சன் விலகியதாக கூறப்படுகிறது. இவர் விலகியதை தொடர்ந்து பிரெக்சிஸ்ட் செயலாளராக டேவிட் டேவிஸூம் விலகினார். தெரசா மே அமைச்சரவையில் இரு அமைச்சர்கள் விலகியது அந்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பிரதமருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

போரீஸ் ஜான்சன் ராஜினாமாவை பிரதமர் தெரசா மே ஏற்றுக்கொண்டார். புதிய அமைச்சரை நியமிக்கும் நடவடிக்கையிலும் இறங்கினார். மற்றொரு அமைச்சர் டேவிட் டேவிஸ் விலகியதையடுத்து அவருக்கு பதிலாக டொமனிக்ராப் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

 

பிரெக்சிட்' என்றால் என்ன?

ஐரோப்பிய யூனியனிலிருந்து (EU) வெளியேறுவது குறித்து இங்கிலாந்து பிரதமராக கேமரூன் பதவி ஏற்றதும் விவாதங்கள் தொடங்கின. இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, 1 கோடியே 57 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். 58% மக்கள் வெளியேற ஆதரவும், 42% மக்கள் வெளியேற எதிர்ப்பும் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவதாக பிரிட்டன் அறிவித்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டிஷ் வெளியேறும் முக்கியமான இந்த நிகழ்வு 'பிரிட்டிஷ் எக்சிட்' (British Exit) என்பதன் சுருக்கமான 'பிரெக்சிட்' (Brexit) என்ற பெயரால் குறிக்கப்படுகிறது

 

 

Related Stories