HEADLINES:
November 22 2019
பரபரப்பை ஏற்படுத்தும் சாமியின் புது புத்தகம்
10 July 2018

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி, இதற்கு முன் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். அந்த வரிசையில், ' தி ஐடியாலஜி ஆப் இந்தியாஸ் மாடர்ன் ரைட்' என்ற புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் இந்துக்கள், இந்து மதம், இந்துத்வா குறித்து விரிவாக அலசுகிறது. இந்துத்வாவின் மனநிலை குறித்து எட்டு அம்சங்களை இந்த புத்தகம் முன் வைக்கிறது.






* 10 ஆயிரம் ஆண்டுகளாக பிளவுபடாத நாகரிகம் தொடர்வது



* தேசிய கொள்கைகளை ஆன்மிக திட்டங்களுடன் வகுப்பது



* அரசியல் சட்டத்தில் உள்ள, 'மதசார்பின்மை' என்ற வார்த்தையை, ' ஆன்மிகம்' என்ற வார்த்தையாக மாற்றுவது




* ஒட்டு மொத்த மத மாற்றத்திற்கு தடை விதிப்பது




* பிறப்பு அடிப்படையில் ஜாதி அடையாளம் தருவது, இந்து கொள்கை அல்ல என அறிவிப்பது, தீண்டாமையை ஒழிப்பது




* உண்மையான இந்துக்கள், சமஸ்கிருதம் கற்பதை முக்கியத்துவமாக கொள்வது, இப்படி செய்வது மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாடு முழுவதும் ஒரு இணைப்பு மொழியாக சமஸ்கிருதம் மாறுவது




* சர்வாதிகாரம் மற்றும் பயங்கரவாதத்திற்கு, இந்துக்கள் அனுமதி அளிக்காமல் இருப்பது




* ராம ராஜ்ஜியம் மற்றும் சாணக்கிய நீதியின் அடிப்படையில், இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினை புரிவதை கட்டாயம் ஆக்கும் வகையில், இந்துத்துவா பின்னணியில் ஒரு நிர்வாகத்தை கட்டி எழுப்புவது ஆகிய விஷயங்களை சாமி இந்த புத்தகத்தை விளக்கி கூறியுள்ளார். 



இப்புத்தகம் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் கிடைக்கிறது. விலை ரூ.389.

 

 

Related Stories