HEADLINES:
September 22 2019
காஷ்மீரில் கடத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் பிணமாக மீட்பு
06 July 2018

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடத்தப்பட்ட போலீஸ்காரர் பிணமாக மீட்கப்பட்டார் 
காஷ்மீரில் கடந்த ஜூன் 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஓளரங்சீப் என்பவரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்று கொடூரமாக கொலை செய்தனர். பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியம் மீண்டும் தொடர்கதையாகி வருகிறது. நேற்று சோபியான் மாவட்டத்தில் ஜாவியத் அகமது என்ற போலீஸ்காரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். கடத்தப்பட்ட போலீசை தேடும் பணி துவங்கியது. இ்ந்நிலையில் அவர் பிணமாக மீட்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related Stories