HEADLINES:
October 21 2019
ஜெ.,க்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது : டாக்டர்கள் தகவல்
04 July 2018

சென்னை : ஜெயலலிதாவை மருத்துவனையில் அனுமதிக்க கொண்டு செல்லும் போது பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாக அப்பல்லோ டாக்டர் சினேகாஸ்ரீ, ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரித்து வருகிறது. இதில் ஆஜரான அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் சினேகாஸ்ரீ வாக்குமூலம் அளித்தார். அதில், செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனைக்கு ஜெ., அழைத்து செல்லும் முன்பே அவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக சினேகாஸ்ரீ வாக்குமூலம் அளித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

5 பேருக்கு சம்மன்:

ஜூலை 10ம் தேதி, ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராகும்படி 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினம், அப்பல்லோ டாக்டர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் மகாலட்சுமி, டாக்டர் சிவக்குமார் மற்றும் ஐ.ஏ.எஸ்., ராமலிங்கம் ஆகியோர் 10ம் தேதி ஆஜராகும்படி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

 

 

Related Stories