HEADLINES:
May 26 2020
உ.பி.,யில் 8ம் வகுப்பு படித்தவர் செய்த 'ஆப்பரேஷன்'
04 July 2018

லக்னோ : உ.பி.,யில், எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள, மருத்துவமனை உரிமையாளர், நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த, 'வீடியோ,' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உ.பி., மாநிலத்தின் ஷாம்லி நகரில், நர்தேவ் சிங், என்பவர், மருத்துவமனை நடத்தி வருகிறார். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர், சமீபத்தில், நோயாளி ஒருவருக்கு, தன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு, பெண் ஊழியர் ஒருவர் உதவியாக இருந்துள்ளார்.

இந்த சம்பவத்தை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, தலைமை மருத்துவ அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. 

பின், மருத்துவமனையில் விசாரணை நடத்த, நிபுணர் குழு சென்றபோது, அவர்களை, உ.பி., மாநில, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான, பவன் தரார், தடுத்து நிறுத்தி தகராறு செய்ததால், ஆய்வு நடத்தாமல், நிபுணர் குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.

சம்பவம் நடந்த மருத்துவமனையில், கடந்த ஒரு ஆண்டில், 24 நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான புகார்களால், மூன்று முறை, மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆளும் கட்சியுடன், நர்தேவ் சிங்கிற்கு உள்ள நெருக்கத்தால், மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டது.

 

 

Related Stories