HEADLINES:
August 19 2019
குல்தீப், ராகுல் 'விஸ்வரூபம்'; இந்திய அணி அசத்தல் வெற்றி
04 July 2018

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' லீக் போட்டியில் லோகேஷ் ராகுல் சதம் விளாச, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழலில் கலக்கிய குல்தீப், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.

 

சபாஷ் குல்தீப்:

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (30), பட்லர் ஜோடி துவக்கம் கொடுத்தது. பட்லர், சர்வதேச 'டுவென்டி-20' யில் 7வது அரைசதம் அடித்தார். ஹேல்ஸ் (8) ஏமாற்றினார். குல்தீப்பின் 3வது ஓவரின் முதல் பந்தில் இயான் மார்கன் (7) சிக்கினார். 3, 4வது பந்தில் பேர்ஸ்டோவ், ஜோ ரூட், 'டக்' அவுட்டாகினர். 5வது பந்தை மொயீன் அலி (6) தடுத்து விளையாட 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.

மீண்டும் வந்த குல்தீப் யாதவ், பட்லரை (69) வீழ்த்தினார். உமேஷிடம், ஜோர்டன் (0) சரிந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5, உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

ராகுல் அசத்தல் சதம்:

 

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் (5) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் வந்த லோகேஷ் ராகுல் சிக்சர் மழை பொழிந்தார். பிளங்கட் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் எடுக்க, வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது இந்தியா. இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா (32) அவுட்டானார். பின் சற்று நிதானம் காட்டிய ராகுல் சதம் எட்டினார். 

இந்திய அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (101), கேப்டன் கோஹ்லி (20) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாவது போட்டி வரும் 6ம் தேதி கார்டிப்பில் நடக்கவுள்ளது.

 

 

Related Stories