HEADLINES:
December 09 2018
யாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
04 July 2018

புதுடில்லி: யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக முதல்வர், துணை நிலைகவர்னர் இடையேயான மோதல் வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது.

டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை கவர்னருக்கும் இடையே நிர்வாகத்தை யார் நடத்துவது குறித்து மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி அரசு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.ஆட்சி நிர்வாக அதிகாரம், துணை நிலை கவர்னருக்கு மட்டுமே உள்ளது' என, டில்லி உயர்நீதிமன்றம், 2016, ஆக., 4ல் தீர்ப்பு அளித்தது. 
இதை எதிர்த்து, டில்லி அரசு பல்வேறு வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. 'சட்டம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பானகேள்விகள் எழுவதால், இந்த வழக்கை, அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும்' என, டில்லி அரசு கோரி வந்தது. மேலும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியது. 
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன. 'ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்' என, அமர்வு கூறியுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் பி.சிதம்பரம், கோபால் சுப்பிரமணியம், ராஜிவ் தவான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மத்தியஅரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங் வாதாடினார். இருதரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து தீர்ப்பு இன்று வெளியாகிறது. இதில் யாருக்கு தீர்ப்பு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

Related Stories