HEADLINES:
December 15 2019
புல்லட் ரயில் திட்டம் சரியா? மெட்ரோமேன் சர்ச்சை பேட்டி
03 July 2018

புதுடில்லி: புல்லட் ரயில்திட்டம் பணக்காரர்களுக்கு மட்டும் தான், ஏழைகளுக்கு எட்டாக்கனி என மெட்ரோமேன் ஸ்ரீதரன் கருத்துதெரிவித்தார்.
ஜப்பான் உதவியுடன் மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில்திட்டம் ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பில் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபோ ஆகியோர் துவக்கிவைத்தனர். வரும் 2022-ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் மெட்ரோமேன் என அடைமொழியாக அழைக்கப்படும் ஸ்ரீதரன் , நாட்டில் மெட்ரோ ரயில் தரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
நேற்று அவர் அளித்த பேட்டி, புல்லட் ரயில் திட்டம் பணக்காரர்களுக்கு தான் சாத்தியம், சாமானிய மக்களுக்கு எட்டாக்கனி தான், இந்தியாவுக்கு இப்போது புல்லட் ரயில் திட்டம் தேவையில்லை. சமானியனுக்கு பாதுகாப்பான, வேகமான, குறைந்த கட்டண ரயில்சேவை தேவை.. ரயில்வே துறையில் பயோ-டாய்லட் முறையை தவிர தொழில்நுட்ப ரீதியாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றார்.
புதுடில்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் மேலாளராகக் கடந்த 1995 முதல் 2012-ம் ஆண்டுவரை பணியாற்றிய மெட்ரோமேன் ஸ்ரீதரன் அளித்த பேட்டி பிரதமர் மோடியின் கனவு திட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

Related Stories