HEADLINES:
July 15 2019
இந்திய ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்னடைவு : மெட்ரோ மேன் ஸ்ரீதரன்
02 July 2018

புதுடில்லி : வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக, இந்தியாவின் மெட்ரோ மேன் என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ரயில்வேக்கு தற்போதைய தேவை நவீன, தூய்மையான, பாதுகாப்பான மற்றும் அதிவிரைவு அம்சங்கள் தான் ஆகும். புல்லட் ரயில் சேவை வரவேற்கத்தக்கதே எனினும், அது உயர்தர வகுப்பினருக்கானது என்பதே உண்மை. ரயில்வேயில், தற்போது பயோ - டாய்லெட் உள்ளிட்ட அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதே ஆயினும், டெக்னிக்கல் விஷயத்தில் நாம் இன்னும் மேம்படவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை. ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படவே இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், முன்னணி ரயில்களின் வேகம் பாதியளவு குறைந்துள்ளது. நேரந்தவறாமை (ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை) அறவே இல்லை என்றே கூறவேண்டும்.
ரயில்வே டிராக் மரணங்கள், ஆண்டிற்கு 20 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிவருவதாக அவர் மேலும் கூறினார்.


யார் இந்த ஸ்ரீதரன்! :

இந்திய பொறியியல் துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியான ஸ்ரீதரன், பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களின் ஆலோசகராக செயல்பட்டவர்.

மெட்ரோ ரயில் சிஸ்டத்தில் தொழில்நுட்ப தரம் மற்றும் மேம்பாடு தொடர்பாக, மத்திய அரசால் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவிற்கு, ஸ்ரீதரன், தற்போது தலைமை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories