HEADLINES:
July 05 2020
60 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்
02 July 2018

சேலம் : சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்புக்கள் நீரில் மூழ்கி உள்ளன. 
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் சேலம் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக குளங்கள், ஏரிகள் நிரம்பி உள்ளன. 
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 60 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 10,383 கனஅடியில் இருந்து 18,824 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 60.30 அடியாகவும், நீர்இருப்பு 24.91 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

 

Related Stories