HEADLINES:
July 21 2019
நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்
02 July 2018

புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் நீரவ் மோடி. வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரியான நீரவ் மோடி போலி பாஸ்போர்ட் மூலம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் பயணித்து வந்ததாக கூறப்பட்டது.

இதனால் நீரவ் மோடியை பிடிக்க உதவி செய்யும்படி பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியா கடிதம் அனுப்பி உள்ளது. நீரவ் மோடி குறித்து தகவல் தெரிந்தால் இந்தியாவிற்கு தெரிவிக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகமும் தகவல் அனுப்பி உள்ளது. இந்நிலையில் இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

 

 

Related Stories