HEADLINES:
November 12 2019
காவிரி தீர்ப்பு 15 ஆண்டுகள் வரை பொருந்தும் : முதல்வர்
02 July 2018

சென்னை : சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக துரைமுருகன், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக பிரதிநிதிகளை அழைத்து பேசி எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்போம்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆணையத்தின் செயல்பாடுகளை பொறுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி தீர்ப்பு 15 ஆண்டுகள் வரை பொருந்தும். சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இன்றைய கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் பேசி தீர்க்கப்படும். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற்று வரும் வகையில் முதல் ஆலோசனைக் கூட்டம் அமையும். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

 

 

Related Stories