HEADLINES:
August 20 2018
பாஸ்போர்ட் 'ஆப்' : 10 லட்சம் பேர் ஆர்வம்
30 June 2018

புதுடில்லி: மத்திய அரசின் சார்பில் துவக்கி வைக்கப்பட்டுள்ள, பாஸ்போர்ட் சேவைக்கான (mPassport Seva) 'மொபைல் ஆப்'பை, 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 
நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் நபரும், மொபைல் போன் மூலம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்'பை, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், வெளியுறவு அமைச்சருமான, சுஷ்மா சுவராஜ், சமீபத்தில் அறிமுகம் செய்தார். இதில், கம்ப்யூட்டர், பிரின்டர் இன்றி, மொபைல் போன் மூலம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதுடன், அதற்கான கட்டணம் செலுத்தி, நேர்காணலுக்கான நேரம், தேதியை பெறும் வசதியும் உள்ளது. இதனால், புதிய, 'மொபைல் ஆப்'பிற்கு, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. பாஸ்போர்ட்டிற்கான, புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்ட, இரண்டு நாட்களில், 10 லட்சம் பேர், அந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்துள்ளதாக, அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Related Stories