HEADLINES:
July 23 2019
குலாம்நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு
30 June 2018

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளை விட, அதிகளவில் பொது மக்கள் கொல்லப்பட்டதாக, அவதுாறாக பேசிய, காங்., மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத் மீது, டில்லி நீதிமன்றத்தில், தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. டில்லி நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சஷி பூஷண் தாக்கல் செய்த மனு: காங்., மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சமீபத்தில், 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளை விட, அதிகளவில் பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறினார். அவரது இந்த பேட்டி, நம் ராணுவத்தை அவமதிப்பதாக உள்ளது. தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 

 

Related Stories