HEADLINES:
November 12 2019
கின்னஸ் சாதனை படைத்த வைர தாமரை மோதிரம்
30 June 2018

சூரத் : குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர்கள், நீர் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு 6,690 வைர கற்களை கொண்டு தாமரை வடிவ மோதிரத்தை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர்கள் விஷால் அகர்வால் மற்றும் குஷ்பூ அகர்வால். இவர்கள் எதையாவது சாதித்து பிரபலம் ஆகவேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்து வந்தனர். தாங்கள் சார்ந்த ஆபரண துறையிலேயே சாதிக்கலாம் என்று முடிவெடுத்ததனர். இதற்காக, கின்னஸ் சாதனைகளை புரட்டினர். 18 கேரட் தங்கத்தை கொண்டு 48 வைர முலாம் பூசப்பட்ட ரோஸ் மோதிரமே, கின்னஸ் சாதனையாக இருந்தது. இதனை முறியடித்து தாங்கள் கின்னஸ் சாதனை செய்யவேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தனர்.

6 மாத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி : நாட்டின் முக்கிய பிரச்னையாக திகழும் நீர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாமரை வடிவிலான வைர மோதிரத்தை உருவாக்க திட்டமிட்டனர். 6 மாத உழைப்பின் பலனாக, 6,690 வைர கற்களை கொண்டு மோதிரத்தை உருவாக்கினர். 58 கிராம் அளவிற்கு இந்த மோதிரத்தின் எடை இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில், இது ரூ. 28 கோடி மதிப்பு ஆகும். இந்த மோதிரம், தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்த கின்னஸ் சாதனை மோதிரம் உருவாக்கம் குறித்த வீடியோவினை, சமூகவலைதளங்களில் 4 லட்சம் முறைக்குமேல் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories