HEADLINES:
November 12 2019
காவிரி விவகாரம் : குமாரசாமி இன்று அவசர ஆலோசனை
30 June 2018

பெங்களூரு : நீண்ட போராட்டம் மற்றும் இழுபறிக்கு பிறகு உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் ஜூலை 2 ம் தேதி நடைபெற உள்ளது. 
தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களும் காவிரி மேலாண்மை ஆணைய குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களை நியமித்து விட்டன. ஆனால் கர்நாடகா இதுவரை உறுப்பினரை நியமிக்கவில்லை. இதனால் கர்நாடகாவிற்காக காத்திருக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, அதன் ஆலோசனை கூட்டத்திற்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. 
இதற்கிடையில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அவசர கூட்டத்திற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories