HEADLINES:
November 13 2019
548 பேரிடம் மட்டுமே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு
29 June 2018

புதுடில்லி : வெறும் 548 பேரிடம் மட்டுமே கருத்துக்கணிப்பு நடத்திய தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம், பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக முடிவை வெளியிட்டுள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்கும்படி ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுள்ளது.
இங்கிலாந்தில் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஐ.நா., சபையில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் பாலியல் தொழிலில் அடிமை, பணிப்பெண் சேவை, பெண் கடத்தல், கட்டாய திருமணம், கல் எறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசு கொலை உள்ளிட்ட நடைமுறைகளில் பெண்களுக்கு அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக முடிவை அறிவித்தது. 

கடந்த மார்ச் 26ம் தேதியில் இருந்து மே 4ம் தேதி வரை, 548 பேரிடம் மட்டுமே ஆன்லைன், தொலைபேசி, நேரடியாகவும் கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் உள்ள மற்ற நாடுகளை காட்டிலும், பெண்கள் வளர்ச்சி, முன்னேற்றம் கடந்த ஆண்டுகளை விட, இந்தியா நல்ல நிலையில் உள்ளதாகவும், கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட 548 பேர் குறித்த விவரங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories