HEADLINES:
November 20 2019
தேர்தலுக்காகவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோ வெளியீடு : அருண் சோரி
29 June 2018

புதுடில்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் மற்றும் பாக்.,ன் குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதற்காகவும் 2016 ம் ஆண்டு நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த வீடியோவை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. ஆனால் இதனை காங்., கடுமையாக விமர்சித்துள்ளது.
தனியார் ஆங்கில டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரி, ராணுவ வீரர்கள் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மத்திய அரசு தனது பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறது. 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மனதில் வைத்தே இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் கேலிக்கூத்தானது. 
இந்த தாக்குதலில் பா.ஜ., அரசுக்கு எந்த கவுரமும் இல்லை. தங்களை நிரூபிப்பதற்காக இன்று வீடியோவை வெளியிடும் பா.ஜ., நாளை சான்றிதழை வெளியிட்டு தங்களை நிரூபிக்க பார்க்கும். இது போன்ற தாக்குதல்கள் இதற்கு முந்தைய காலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது என்றார். காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவ்லா கூறுகையில், பா.ஜ., அரசும், அக்கட்சி தலைவர் அமித்ஷாவும் ராணுவத்தின் முயற்சியை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இது வெட்கக் கேடானது என்றார்.

 

 

Related Stories