HEADLINES:
November 20 2018
வெளிநாட்டவர்களுக்கு காஸ்ட்லி நகரமான மும்பை...
28 June 2018

புதுடில்லி : ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரங்களில் வாழ்வதைவிட, வெளிநாட்டவர்கள் மும்பையில் வாழ அதிக பணம் செலவு ஆவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மெர்சர் நிறுவனம், உலகின் காஸ்ட்லி நகரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதன் ஆய்வுமுடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

உலகின் அதிக காஸ்ட்லி நகரங்கள் பட்டியலில், ஹாங்காங் முதலிடத்திலும், அதற்கடுத்த இடங்களில் டோக்கியோ, ஜூரிச், சிங்கப்பூர் நகரங்கள் உள்ளன.

இந்திய நகரங்களில் மும்பை, 55வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் 58 வது இடத்திலும், பிராங்க்பர்ட் (68), பியூனோஸ் ஏரிஸ் (76) நகரங்கள் உள்ளன.

இந்த பட்டியலில், டில்லி 103வது இடத்திலும், சென்னை 144 வது இடத்திலும், பெங்களூரு 170வது இடத்திலும் உள்ளன.

 

 

Related Stories