HEADLINES:
November 22 2019
கமல்நாத்துக்கு, 'ஷூ' அணிவித்த காங்., - எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு
26 June 2018

போபால் : காங்., மூத்த தலைவர் கமல்நாத்துக்கு, ம.பி., மாநில, காங்., - எம்.எல்.ஏ., ரஜ்னீஸ் சிங், 'ஷூ லேஸ்' அணிவிக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியானதால், சர்ச்சை எழுந்துள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநில முன்னாள் கவர்னரும், காங்., மூத்த தலைவருமான ஊர்மிளா சிங், சமீபத்தில் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில், ம.பி., மாநில காங்., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, கமல்நாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, அந்த கூட்டத்தில் பங்கேற்ற, காங்., - எம்.எல்.ஏ., ரஜ்னீஸ் சிங், கமல்நாத்தின் கால்களில், 'ஷூ லேஸ்' கட்டி விடும் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது, காங்., வட்டாரத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

கனவு நாயகன்:

 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, ரஜ்னீஸ் சிங் விளக்கம் அளித்ததாவது: கமல்நாத்தை, என் தந்தைக்கு இணையாக மதிக்கிறேன். கல்லுாரி காலத்திலேயே, அவரை கனவு நாயகனாக நினைத்தேன். அப்போதே, பல முறை, அவரது காலை தொட்டு வணங்கி, ஆசி பெற்றிருக்கிறேன். 

இரங்கல் கூட்டத்திற்கு, ஏராளமானோர் வந்திருந்தனர். அதில், கமல்நாத், தன் ஷூவை கண்டறிய, மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என நினைத்தேன். எனவே, அவரது ஷூவை எடுத்து வந்து, அவருக்கு உதவி செய்தேன். இதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Related Stories