HEADLINES:
November 17 2019
வாராக்கடன் விளக்கம் அளிக்க 11 வங்கி தலைவர்கள் இன்று ஆஜர்
26 June 2018

புதுடில்லி : வாராக்கடன் மற்றும் கடன் மோசடிகளில் சிக்கித் தவிக்கும், 11 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், பார்லி., நிலைக்குழு முன், இன்று(ஜூன் 26) நேரில் ஆஜராகி, பிரச்னைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க உள்ளனர்.

நாட்டில் உள்ள பல பொதுத் துறை வங்கிகள், கடுமையான நிதிச் சுமையில் சிக்கி தவிக்கின்றன. 2017 டிசம்பர் வரை, வாராக்கடன் தொகை, 8.99 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும், வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்யும் தொழிலதிபர்களின் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது. 

2017 - 18ம் நிதியாண்டில், 5,904 பேர், வங்கிகளில் மோசடி செய்துள்ளனர். 2018 மார்ச் வரை, 32 ஆயிரத்து, 361 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த வங்கி மோசடிகள் மற்றும் வாராக்கடன்கள் குறித்து ஆய்வு செய்ய, மூத்த காங்., தலைவர், வீரப்ப மொய்லி தலைமையில், பார்லி., நிலைக்குழு உருவாக்கப்பட்டது.

யூகோ வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி உட்பட, 11 வங்கிகளின் தலைவர்கள், பார்லி., நிலைக்குழு முன், இன்று ஆஜராகி, பிரச்னைகள் குறித்து, விரிவாக விளக்கம் அளிக்க உள்ளனர்.

 

 

Related Stories