HEADLINES:
July 06 2020
வெற்று கோஷங்கள் உண்மையை மாற்றாது: பாக்.,கிற்கு இந்தியா பதில்
26 June 2018

ஐக்கிய நாடுகள்: வெற்று கோஷங்கள், காஷ்மீர் குறித்த உண்மையை மாற்றாது என ஐ.நா.,வில் இந்தியா கூறியுள்ளது.

சமீபத்தில், ஐ.நா., மனித உரிமை அமைப்பு, ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, அதனை ஏற்க முடியாது எனக்கூறியிருந்தது. இந்த அறிக்கை தொடர்பாக ஐ.நா., சபையில் பாகிஸ்தான் தூதர் பேசும் போது, ஜம்மு காஷ்மீர் குறித்தும், இந்தியா குறித்தும் பேசியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக ஐ.நா., பொது சபையில், இந்திய தூதர் சந்தீப்குமார் பேசியதாவது: ஒரு உறுப்பு நாடு, மீண்டும் ஜம்மு காஷ்மீர் குறித்த தவறான தகவலை பதிவு செய்ய ஐ.நா., சபையை மீண்டும் பயன்படுத்தியுள்ளது. காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்த உண்மையை, எந்தவொரு வெற்று கோஷமும் மாற்றாது எனக்கூறியுள்ளார்.

 

 

Related Stories