HEADLINES:
January 21 2020
எட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி
25 June 2018

சேலம் : புதிதாக அமைய உள்ள, எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு, நிலம் அளவிடும் பணி, சேலம் மாவட்டத்தில், இன்று முடிவுக்கு வருகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் தினகரன் கட்சி, வி.ஐ.பி.,க்களின் நிலங்கள், இன்று அளவீடு செய்யப்பட உள்ளதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம் - சென்னை, 277 கி.மீ., எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக, சேலம் மாவட்டத்தில், 29 கிராமங்களில், 36.3 கி.மீ.,க்கு நிலம் அளவிடும் பணிகள், 18ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று பாரப்பட்டி துவங்கி, பூலாவரி, வீரபாண்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம் வரை, 2.86 கி.மீ.,க்கு அளவிடும் பணிகள் நடக்கிறது.

இன்று, தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., ராஜா, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, அவரின் சகோதரி ஓய்வு பெற்ற, டி.ஆர்.ஓ., சாந்தா, தினகரன் கட்சியின், புறநகர் மாவட்ட செயலர், எஸ்.கே.செல்வம் ஆகியோரின் நிலங்களில் அளவிடும் பணிகள் நடக்கின்றன.

வி.ஐ.பி.,க்களின் நிலங்கள் என்பதால், எதிர்ப்புகள், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டடுள்ளது. மேலும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் மக்கள் குறை தீர் கூட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமலிருக்கவும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

Related Stories