HEADLINES:
January 21 2020
பொதுநல வழக்குகளை தலைமை நீதிபதி மட்டுமே விசாரிப்பார்
25 June 2018

புதுடில்லி : கோடை விடுமுறைக்கு பிறகு, ஜூலை 2ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் திறக்கப்படும். அன்றைய தினம் முதல் புதிய அறிவிக்கை நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்படும் வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், லோக்கூர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி, பாப்தே, ரமணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அனைத்து பொதுநல வழக்குகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவோ, அல்லது அவரது தலைமையிலான அமர்வு மட்டுமே விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சமூக நீதி தொடர்பான புகார்கள், தேர்தல் முறைகேடு புகார்கள், ஆட்கொணர்வு மனு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றையும் தீபக் மிஸ்ரா அமர்வு விசாரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

Related Stories