HEADLINES:
March 28 2020
மகாராஷ்டிரா, குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை
25 June 2018

மும்பை : மகாராஷ்ராவிலும், குஜராத் மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
நாட்டின் வர்த்த தலைநகரான மும்பையில் கனமழை வெளுத்து வாங்குவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால், தாராவி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கனமழை காரணமாக ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களும் தாமதமாகவே புறப்பட்டு செல்கின்றன.
இதேபோன்று, குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. தண்டவாளங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதைகள் சீரமைக்கும் பணி நடந்து வருவதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

 

Related Stories