HEADLINES:
February 22 2019
பொதுத்துறை வங்கிகளுக்கு 100% உத்தரவாதம்: பியூஷ் கோயல்
20 June 2018

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கிறது என நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

டில்லியில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பியூஷ் கோயல், செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: பொதுத்துறை வங்கிகளை சிறப்பான முறையில் வழி நடத்த, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு 100 சதவீத உத்திரவாதம் அளிக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் மக்களின் பணம் முழு பாதுகாப்பாக உள்ளது. 

ஆனால் அதிகளவில் வருமான வரி பாக்கி வைத்துள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள மக்களின் பணம் கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலும் முறைகேடுகளுக்கு தனியார் நிறுவனங்கள் தான் காரணமாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Related Stories