HEADLINES:
July 21 2019
விவசாயிகள் நலனுக்காக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது : மோடி
20 June 2018

புதுடில்லி : மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயனாளர்களுடன் பிரதமர் மோடி, நமோ ஆப் மற்றும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் இன்று நாட்டில் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளுக்காக திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். நாடு முழுவதிலும் உள்ள 600 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆண்டிற்குள் இருமடங்காக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இந்திய விவசாயிகளின் நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம்.
வேளாண்மையில் மகத்தான வளர்ச்சியை ஏற்படுத்தவே திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. முந்தைய அரசுகளை விட முன்னேற்றத்தை கொண்டு வர நினைக்கிறேதம். விவசாயம் சார்ந்த அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். ஒ்வவொரு கட்டத்திலும் விவசாயிகளுக்கு உதவி வருகிறோம். விதைப்பது முதல் விளைச்சலை சந்தை படுத்துவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் அரசு உதவி வருகிறது. விவசாயிகளுக்காக மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது. காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது என்றார்.

 

 

Related Stories