HEADLINES:
September 21 2018
போலி ரூபாய் புழக்கம் சுவிஸ்சில் குறைந்தது
18 June 2018

புதுடில்லி : கறுப்புப்பண முதலைகளின் சொர்க்கபுரியாக கருதப்படும், சுவிட்சர்லாந்தில், 2017ல், மூன்று, போலி இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டுமே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கறுப்புப்பண முதலைகள், பெருமளவில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நாட்டில், உலக நாடுகளின் போலி கரன்சி நோட்டுகள் புழக்கமும் அதிகம்.

இந்தியாவில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அமலான, 2016ல், சுவிட்சர்லாந்தில், போலி, 1,000 ரூபாய் நோட்டுகள், 1,437, போலி, 500 ரூபாய் நோட்-டுகள் ஐந்து பிடிபட்டன. இந்த எண்ணிக்கை, 2017ல், வெகுவாக குறைந்து, வெறும் மூன்று, போலி இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டுமே சிக்கியதாக, சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில், அமெரிக்க நாட்டு கரன்சியான, டாலர், போலியாக தயாரிக்கப்பட்டு, அதிகளவில் புழங்குவ-தாக கூறப்படுகிறது. 2017ல், 1,976 போலி அமெரிக்க டாலர்களும், 2,500 போலி ஜப்பான் யென் கரன்சிகளும், சுவிட்சர்லாந்தில் சிக்கியதாக தெரிகிறது.

 

 

Related Stories