HEADLINES:
July 21 2019
நிரவ் மோடியிடம் 6 பாஸ்போர்ட்டுகள்!
18 June 2018

புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்சென்ற நிரவ் மோடி, 6 பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினர் மெஹுல் சோக்சி மீது, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்து உள்ளன. நிரவ் மோடி பிரிட்டனில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நிரவ் மோடி வெளிநாட்டில் பதுங்கியிருந்தபடியே, அடிக்கடி பெல்ஜியம் சென்றதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் நிரவ் மோடி 6 பாஸ்போர்ட் வைத்திருப்பதும், அதில் 2 பாஸ்போர்ட்டுகளை மட்டும் பயன்பாட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த இரு பாஸ்போர்ட்டுகளையும் இந்திய அரசு முடக்கியபோதும், வெளிநாடுகளில் அவரது பாஸ்போர்ட்டை முடக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதை பயன்படுத்தி நிரவ் பல நாடுகளுக்கு சென்று வருவது தெரியவருகிறது. 

இந்நிலையில், நிரவ் மோடிக்கு எதிராக ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் வைத்துள்ளதாக, எப்.ஐ.ஆர்., தாக்கல் செய்ய, சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

 

Related Stories