HEADLINES:
April 05 2020
பா.ஜ.வுக்கு குட்பை சொல்ல சத்ருகன் ரெடி
15 June 2018

பாட்னா: சத்ருகன் சின்கா பா.ஜ.வில் இருந்து விலகி ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் இணைந்தால் வரவேற்போம் என தேஜாஸ்வி யாதவ் கூறினார்.
பீஹாரில் பிரதான எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளது.இக்கட்சி சார்பில் நேற்று நடந்த இப்தார் விருந்தில், பா..ஜ. எம்.பி. சத்ருகன்சின்கா கலந்து கொண்டார்.இவர் தனது சொந்த கட்சியையும் அதன் மேலிடத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. 
இந்நிலையில் விரைவில் காங், அல்லது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் இணையலாம் என செய்திகள் வெளியாயின.இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் லாலுவின் மகனுமான தேஜாஸ்வி யாதவ், கூறியது, சத்ருகன்சின்கா ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் இணைந்தால் அவரை வரவேற்போம்.கட்சியில் சேருவது அவரது தனிப்பட்ட முடிவு. கட்சியில் இணைந்தால் வரப்போகும் 2019-ம் லோக்சபா தேர்தலில் பாட்னாஷாகிப் லோக்சபா தொகுதியில் போட்டியிட சீட் தருவோம். என்றார்.

இதே போன்று மற்றொரு பா.ஜ. எம்.பி.யான கீர்த்தி ஆசாத், பா.ஜ.வில் இருந்து விலகி காங், கட்சியில் ஐக்கியமாக தயாராகி வருவதாகவும், கட்சியில் இணைந்தால் அவருக்கு மீண்டும் அதே தர்பங்கா லோக்சபா தொகுதி ஒதுக்க காங். சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

Related Stories