HEADLINES:
April 05 2020
அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
14 June 2018

புதுடில்லி: அணைகள் பாகாப்புக்கு சட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்ற உள்ளது. இந்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு வழிவகுக்கும். மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு, மேலும் அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை அமைக்கப்படும்.

 

 

Related Stories