HEADLINES:
December 10 2018
நாளை காங்., மஜத கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
13 June 2018

புதுடில்லி: காங்கிரஸ் ,மஜத கட்சிகளின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை கூடுகிறது.
நடந்து முடிந்த கர்நாடக மாநில தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மஜத கட்சிகள் தேர்தல் முடிவுக்கு பிந்தைய கூட்டணியாக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக மஜத தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஷ்வரா ஆகியோர் உள்ளனர். 
தேர்தல் பிந்தைய கூட்டணியாக ஆட்சி அமைத்த போதிலும் இரு கட்சிகளிடையே இலாகாக்களை பங்கிடுவதில் கருத்து வேறுபாடு உருவானது. இதனையடுத்து கருத்து வேறுபாடுகளை களைய ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது என இரு கட்சிகளிடையே முடிவு செய்யப்பட்டது. 
இது குறித்து மஜதவின் செயலாளர் டேனிஷ் அலி கூறி இருப்பதாவது:நாளை 14-ம் தேதி மாலை 4 மணி அளவில் இரு கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வரா ,முன்னாள்முதல்வர் சித்த ராமையா மற்றும் இரு கட்சிகளின் சார்பில் தலா ஐந்து உறுப்பினர்க் கலந்து கொள்ள உள்ளனர். 
கூட்டத்தில் முக்கிய பிரச்னைகள் மற்றும் பொதுவான குறைந்த பட்ச திட்டம் குறித்து விவாதிக்கப்ட உள்ளது. மேலும் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறினார்

 

 

Related Stories