HEADLINES:
May 25 2020
11 எம்எல்ஏ.,க்கள், 4 எம்.பி.,க்கள் : கைப்பற்ற போவது யார்?
31 May 2018

புதுடில்லி : நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 11 சட்டசபை தொகுதிகள் மற்றும் 4 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது. 
ஒரே நாளில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. கர்நாடகாவின் ஆர்.ஆர்.நகர் சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட்டு வருகின்றன. ஆர்.ஆர்.தொகுதியில் சட்டசபை தேர்தலும், மற்ற 10 தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. 
இடைத்தேர்தல் நடத்தப்பட்ட மாநிலங்களில் பஞ்சாப், உ.பி., மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் அடங்கும். இதனால் 11 எம்எல்ஏ.,க்கள் மற்றும் 4 எம்பி.,க்கள் பதவியை கைப்பற்ற பா.ஜ.,, காங்., மற்றும் மாநில கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 

 

 

Related Stories