HEADLINES:
May 25 2020
நிபா வைரஸ் பாதிப்பு : கேரளாவில் பலி 15 ஆனது
31 May 2018

கோழிக்கோடு : கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 
நிபா வைரசால் பாதிக்கப்பட்டு கேரளாவில் ஏற்கனவே 13 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது மதுசூதனன் (55) மற்றும் அகில் (28) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரசால் மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் உயிரிழந்த அகிலுடன் தங்கியிருந்தவர் ஆவார்.
இதுவரை 1,353 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்றியப்பட்டுள்ளதாகவும், மேலும் 9 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் சரிதா தெரிவித்துள்ளார். பழந்தின்னி வவ்வால்களால் தான் நிபா வைரஸ் பரவுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக 3 பழந்தின்னி வவ்வால்களில் சோதனை நடத்தப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related Stories