HEADLINES:
February 22 2020
பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறார் கவர்னர்
29 May 2018

சென்னை: தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், இன்று(மே 29) துாத்துக்குடி செல்கிறார்.

துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் இறந்தனர். பலத்த காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து, ஆறுதல் கூறினர். நேற்று முன்தினம், செய்தித் துறை அமைச்சர் ராஜு, மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறினார். நேற்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், இன்று காலை, விமானத்தில் துாத்துக்குடி செல்கிறார். அங்கு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதுடன், பாதிக்கப்பட்டோரை சந்தித்து, ஆறுதல் கூற உள்ளார்.

 

 

Related Stories