HEADLINES:
May 25 2020
பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
29 May 2018

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று துவங்குகிறது. துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

 

இன்று கூடுகிறது:

தமிழக சட்டசபையில், மார்ச், 15ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், மார்ச், 22 வரை நடந்தது. அதன்பின், மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற, இன்று காலை, 10:30 மணிக்கு, சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது; ஜூலை, 9 வரை நடைபெறுகிறது.

 

போலீஸ் குவிப்பு:

இன்றைய கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி பிரச்னை எழுப்ப உள்ளன. சபாநாயகர் பேச அனுமதிக்காவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புண்டு. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

எதிர்க்கட்சிகள் முடிவு:

சட்டசபை வளாகத்திற்குள், தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை மட்டும் அனுமதிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத் தொடரில், துப்பாக்கிச் சூடு சம்பவம், நிர்மலாதேவி விவகாரம், குட்கா ஊழல் உட்பட, பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அவற்றுக்கு பதில் அளிக்க, ஆளும் கட்சியினரும் தயாராகி உள்ளனர். எனவே, சட்டசபை கூட்டத்தில், தினமும் அனல் பறக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

சட்டசபையில் இன்று... :

 

சட்டசபையில், இன்று வனத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் சீனிவாசன், மணிகண்டன் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்

 

 

Related Stories