HEADLINES:
February 22 2020
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கலால் அலுவலரும் உத்தரவு
29 May 2018

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு இரு தாசில்தார்கள் உத்தரவிட்டது எப்.ஐ.ஆர்.,ல் தெரியவந்த நிலையில், கலால் அலுவலர் உத்தரவிட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடியில் மே, 22ல், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில், இரண்டு பெண்கள் உட்பட, 12 பேர் பலியாகினர். 23ம் தேதி, தூத்துக்குடி அண்ணா நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில், காளியப்பன், 22, என்பவர் பலியானார். இரு துணை தாசில்தார்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக எப்.ஐ.ஆர்., வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கோட்ட கலால் அலுவலர் சந்திரனும் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது. 23ம் தேதி சந்திரன் உத்தரவுப்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக எப்.ஐ.ஆர்.,ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை பகுதியில் கல்வீசியவர்களை கலைக்க, துப்பாக்கிச்சூட்டுக்கு சந்திரன் உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories