HEADLINES:
August 18 2018
எதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு
25 May 2018

சென்னை: துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று(மே 25), 'பந்த்' அறிவித்துள்ளன. சென்னையில் மெரினா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகம், டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் மெரினா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

எச்சரிக்கை:

'கட்டாயமாக கடையை அடைக்க வற்புறுத்தினாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்', என போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரியில் நாட்டுப்படகு மீனவர்கள், கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 'பந்த்' காரணமாக அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. தமிழக-கேரள எல்லையில் கேரள பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

 

Related Stories