HEADLINES:
August 18 2018
திருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்
25 May 2018

திருச்சி : திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி என்பவர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததாக தகவல் வெளியானது. கேரளாவிற்கு வேலைக்காக சென்ற பெரியசாமி நிபா வைரஸ் தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் செய்தி பரவியது.
இது பற்றி திருச்சி மாநகர சுகாதாரத்துறை அதிகாரி சித்ராவிடம் கேட்ட போது, திருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. பெரியசாமி என்பவர் உயிரிழந்தது உண்மை தான். இருப்பினும் அவர் நிபா வைரசால் தான் இறந்தாரா என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்றார். 
திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா கூறுகையில், திருச்சியில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் கேரளா சென்று வந்த 40 தொழிலாளர்களிடம் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டு வருகிறது என்றார்.

 

 

Related Stories