HEADLINES:
January 23 2019
பந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்
25 May 2018

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம் மண்டலங்களில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரையில் 60 சதவீதமும், நெல்லையில் 50 சதவீதமும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

தமிழக - கர்நாடக எல்லையில் இருமாநில பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

 

 

Related Stories