HEADLINES:
October 19 2018
மார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்
25 May 2018

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களுக்கு விளக்கம் கேட்டு மும்பை பங்குச்சந்தை, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தது.

இதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மார்ச் 27 ல் இருந்து ஆலை இயக்கப்படவில்லை. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். ஆலையின் மின்சாரம் நிறுத்தியும், முதல் உலையை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது மிகவும் சோகமான சம்பவம். ஆலையை மீண்டும் இயக்குவதற்காக உரிமம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related Stories